Published on 21/04/2020 | Edited on 21/04/2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 2,800-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா உறுதியானதால் ராஷ்டிரபதி பவனில் உள்ள 125 குடும்பங்களும் கட்டாயத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.