Skip to main content

புதுவை தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் பிடியாணை!

Published on 12/12/2021 | Edited on 12/12/2021

 

Court issues arrest to Puducherry Chief Secretary

 

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாசிக் (குடிநீர் விநியோகம் மற்றும் காய்கறிகள் விற்பனை) நிறுவனம் 2007 ஆம் ஆண்டு வரை இலாபத்தில் இயங்கியது. அந்நிறுவனத்திற்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு அந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாக ஊதியம் தரப்படவில்லை. அதையடுத்து பாசிக் நிறுவனத்தில் வேலை செய்த 48 ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2013 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் கடந்த 14.07.2020 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 3 மாதங்களுக்குள் பாசிக் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனாலும் ஊழியர்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை.

 

இதற்கிடையே வழக்கு தொடுத்த 48 பேரில் பணி நீக்கம் செய்யப்பட்ட 8 ஊழியர்கள், 'சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காத தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார், துறைச் செயலாளர் ரவி பிரகாஷ்,  இயக்குனர் பாலகாந்தி, பாசிக் மேலாண் இயக்குநர் சிவசண்முகம் ஆகியோர் மீது கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, 'புதுச்சேரி தலைமைச் செயலாளர் அசோக்குமார்,  துறைச் செயலாளர் ரவி பிரகாஷ், வேளாண் இயக்குநர் பாலகாந்தி, பாசிக் மேலாண் இயக்குநர் சிவசண்முகம் ஆகியோர் டிசம்பர் 10ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வேளாண் இயக்குநர் பாலகாந்தி, மேலாண் இயக்குநர் சிவசண்முகம் ஆகியோர் மட்டுமே நேரில் ஆஜராகினர். தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார், துறைச்செயலாளர் ரவி பிரகாஷ் ஆகியோர் ஆஜராகவில்லை. அதனைத் தொடர்ந்து நேரில் ஆஜராகாத தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

தலைமை செயலாளருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

'பானை சின்னம் வேண்டும்' - நீதிமன்றத்தை நாடிய வி.சி.க.

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 'We want a pot symbol'-vck moves the court

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. பம்பரம் சின்னம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதோடு, பம்பரம் சின்னம் இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற முடிவில் மதிமுக தரப்பு உள்ளது.

இந்நிலையில், அதே திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக பானை சின்னம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல் இன்று முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியுள்ளது. திமுக கூட்டணியில் இரண்டு தொகுதியில் விசிக போட்டியிடும் நிலையில் பானை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது விசிக.