கரோனா வைரஸ் பாதிப்பால் ஆந்திர மாநில பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மாணிக்யாலா ராவ் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. இதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கரோனா பாதிப்புகளைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. சமீப காலமாக இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு வேகம் எடுத்துள்ள சூழலில், பல்வேறு அரசியல் தலைவர்களும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், ஆந்திராவின் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான மாணியாலா ராவ் கரோனால் பாதிக்கப்பட்டு விசாகப்பட்டினத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த ஒரு மாதமாக கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.