டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக்ஸில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதனையடுத்து சிந்துவிற்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்திலும் பி.வி. சிந்துவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் அவையில் பேசுகையில், "இந்த வரலாற்றுச் சாதனைக்காக, இந்த அவையின் சார்பாக சிந்துவை வாழ்த்துகிறேன். அவரது சாதனை இந்த நாட்டின் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமளிக்கும் என்று நம்புகிறேன்" என கூறினார்.
அதேபோல் மாநிலங்களவையில் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, "சிந்து தனது அற்புதமான ஆட்டத்தால், இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றை எழுதியுள்ளார்" என தெரிவித்தார்.