Skip to main content

டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்த பிரியங்கா காந்தி...

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

priyanka gandhi vacates government bungalow

 

டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்துள்ளார் பிரியங்கா காந்தி.

 

கடந்த 1997ஆம் ஆண்டு பாதுகாப்பு காரணத்திற்காகப் பிரியங்கா காந்திக்கு டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள 35-ஆவது எண் குடியிருப்பை அரசு ஒதுக்கியிருந்தது. அதன்பிறகு அந்த வீட்டிலேயே வசித்துவந்த பிரியங்கா காந்தி, தனது கட்சி சார்ந்த சந்திப்புகளையும் அங்கேயே மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதிக்குள் அந்த வீட்டைப் பிரியங்கா காந்தி காலி செய்யவேண்டும் எனவும், வாடகை நிலுவை, ரூ.3.26 லட்சத்தைச் செலுத்து வேண்டும் எனவும் மத்திய அரசு அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது. அவருக்கு வழக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவை மத்திய அரசு எடுத்தது.

 

இதனையடுத்து, அவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவிற்குக் குடிபெயர வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இடம்பெயர்வதற்காகப் பிரியங்கா காந்தி திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் மகளின் பொதுத்தேர்வு ஆகியவற்றால் டெல்லியிலேயே வசித்து வந்தார். இந்தச் சூழலில் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து அவர் விரைவில் லக்னோவுக்கு இடம்பெயர்வார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த அரசு பங்களாவை காலி செய்துள்ள பிரியங்கா, ஹரியானா மாநிலம் குருகிராமில், செக்டார் 42 இல் டி.எல்.ஃஎப். அராலியாவில் உள்ள வீட்டில் தங்கப்போகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்