Skip to main content

இலவச தரிசன டிக்கெட் ரத்து; ஒரு நாளுக்கு மேலாக காத்திருக்கும் பக்தர்கள்

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

Cancellation of Free Darshan Tickets; Devotees who have been waiting for more than a day


புரட்டாசி மாதத்தை ஒட்டி ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததால் நேற்று மாலை 6 மணி முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இன்று காலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று வருகின்றனர்.

 

நேற்று ஒரே நாளில் 87 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும் நான்கு கோடியே 5 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 ரூபாய் டோக்கன் பெற்ற பக்தர்கள் 5 லிருந்து 6 மணி நேரமும், இலவச தரிசனத்திற்கு காத்திருக்கும் மக்கள் 24 மணி நேரத்திற்கு மேலாகவும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்மன் கழுத்திலிருந்த தாலியைப் பறித்துச் சென்ற நபர்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
theft inside temple near vellore

வேலூர் மாநகரம், கொசப்பேட்டையில் ஆனைகுலத்தம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது போல் மர்ம நபர் ஒருவர் நேற்று மாலை கோவிலுக்குள் நுழைந்து சாமி சிலை முன்பு அமர்ந்து சாமி கும்பிடுவதுபோல் இருந்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் சுவாமி சிலையின் கழுத்திலிருந்த தங்கத்தாலியைக் கழட்டி எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். 

பூஜைக்கு வந்த அய்யர் அம்மன் கழுத்தில் இருந்த தாலி காணாமல் போனதை தொடர்ந்து அதிர்ச்சியாகி இதுபற்றி கோவில் அலுவலர்களுக்கும், காவல்துறைக்கும் புகார் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒருவர் அம்மன் சிலை கழுத்திலிருந்த தாலியைத் திருடிச்செல்வது தெரிந்தது. இது தொடர்பான பரபரப்பு சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

theft inside temple near vellore

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டதை தொடர்ந்து திருடனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அம்மன் கழுத்திலிருந்த தாலிய யாரோ பறிச்சிட்டாங்க, இது அபசகுணம். இந்த செயலால் ஆண்களுக்கு ஆபத்து என யாரோ வதந்தியை பரப்பிவிட அப்பகுதி பெண்கள் பரபரப்பும், அச்சமும் அடைந்துள்ளனர். 

Next Story

விஜயகாந்த் நலம் பெற தொண்டர்கள் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

perform special pooja at Shiva temple to seek Vijayakanth well-being

 

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நுரையீரல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார். 

 

நேற்று மருத்துவ நிர்வாகம் அவரது உடல் சீராக இல்லை என அறிக்கை வெளியிட்டது. இதனால் அவரது ரசிகர்களும் தேமுதிக கட்சி தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசியல் களமும் பரபரப்படைந்தது. இதனால் நேற்று இரவு வீடியோ வெளியிட்ட பிரேமலதா, விஜயகாந்த்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் நலமுடன் வீடு திரும்புவார் என வீடியோ பதிவு செய்திருந்தார்.

 

இதனையடுத்து இன்று விஜயகாந்த் உடல்நலம் குணமடைய வேண்டி தேமுதிக தொண்டர்கள் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள பழமையான காசி விஸ்வநாதர் சிவன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள், அர்ச்சனை செய்து விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டினர். இதில் தேமுதிக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.