Published on 28/03/2020 | Edited on 28/03/2020
கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தங்களால் முடிந்த என்ற நிதியை தருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் பல தொழில்துறைகள் முடங்கி இருக்கின்றன, பல அமைப்புசாரா தொழிலாளர்கள் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை தருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடர்களின் போது மக்களுக்காக இதுபோன்ற நிதி உதவி உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.