Published on 19/10/2020 | Edited on 19/10/2020

சில தினங்களாகவே கேரளாவில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகரிக்க ஓணம் பண்டிகை கொண்டாட்டமே காரணம் என கூறியிருந்தார்.
அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கருத்துக்கு, “கேரளாவில் தற்போது அதிக கரோனா பாதிப்பு அதிகம் ஏற்படுவதற்கான காரணம் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களே. பண்டிகை வர உள்ளதால் ஓணம் பண்டிகையால் நோய் பரவல் அதிகம் எனக்கூறி இருக்கலாம்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் கூறியுள்ளார்.