Published on 02/03/2019 | Edited on 02/03/2019
பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சி. அடுத்த ஐந்து வருடத்தில் கிட்டத்தட்ட ரூ. 13,000 கோடியை அசாம் மாநிலத்தில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. கடந்த ஐந்த வருடத்தில் முதலீடு செய்த தொகையைவிட 30% அதிகமாக இம்முறை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் முழுவதையும் பைப்லைன் மூலம் இணைப்பதற்கான பணியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம ஈடுபட்டுவருகிறது என்றும், இதுவரை ரூ. 6,000 கோடி இதில் முதலீடு செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) அசாம் மாநிலத்தில் ரூ.1,500 கோடிக்கு ஒன்பது ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.