![pm modi's advisor](http://image.nakkheeran.in/cdn/farfuture/IulNbbDFjWoHpJrZcTIRix4Gja0vn3_4pDGlALFoHd0/1627909144/sites/default/files/inline-images/cca.jpg)
ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றவர் பீகார் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமர்ஜீத் சின்ஹா. ஓய்வு பெற்றவுடன், பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடிக்கு தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்ட இவர், சமூகத்துறை தொடர்பான விவகாரங்களைக் கையாண்டு வந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது, தனது ஆலோசகர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தனது ராஜினாமாவிற்கு அவர் எந்த காரணத்தையும் குறிப்பிடவில்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தனது பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் ஏழு மாதங்கள் இருக்கும் நிலையில், அமர்ஜீத் சின்ஹா ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பதவிக்காலம் முடியும் முன்னரே பிரதமர் மோடி தலைமையிலான (பிரதமர்) அலுவலகத்திலிருந்து விலகிய மூன்றாவது அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, பிரதமரின் முதன்மை செயலாளராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது பதவியிருந்து விலகினார். அவரைத்தொடர்ந்து தொடர்ந்து, முதன்மை ஆலோசகராக இருந்த பி.கே. சின்ஹாவும் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.