
உத்திர பிரேதசத்தில் பெண்குழந்தை பெற்றெடுத்தற்காக இசுலாமிய பெண்ணை மூன்று முறை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
உபியில் உள்ள ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த இசுலாமிய பெண் ஒருவர் ஒரு வாரத்திற்கு முன்பு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பெண் குழந்தை பெற்றதால் அந்த பெண்ணின் கணவன் மற்றும் அவரது உறவினர்கள் அந்த பெண்ணை அடித்துக் கொடுமை செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் பெண்ணின் வீட்டில் வரதட்சணை வாங்கி வரவேண்டும் என்றும் கொடுமை செய்துள்ளனர். வரதட்சனையாக பைக், பணம் வேண்டும் என்று அந்த பெண்ணை அவர் அப்பவீட்டுக்கு அனுப்பியுள்ளார். பின் வரதட்சனை கிடைக்காது என்று தெரிந்தவுடன். கணவர் அந்த பெண்ணை மூன்று முறை முத்தலாக் சொல்லி விவகாரத்து செய்துள்ளார்.
குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆனநிலையில் கணவரிடம் இருந்து விவாகரத்து வந்திருப்பதால் அப்பெண்ணின் குடும்பம் அதிர்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் ஷோக் குமார் கூறுகையில், ''அப்பெண்ணின் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது'' என்றார்.