ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று இந்து அமைப்புகள் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரவீன் தொகாட்டியா கூறியதாவது,
நம் நாட்டு மக்களிடம் இருந்து அரசுக்கு அதிக வரிப்பணம் கிடைக்கின்றது. ஆனால், அந்தப் பணம், சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்பட்ட ஒரே காரணத்திற்காக இசுலாமியர்களுக்கு அதிக அளவில் செலவிடப்படுகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். அந்த பணத்தை ஏழை மக்களுக்காக செலவிட வேண்டும்.
எனவே, இசுலாமியர்களுக்கு தரப்பட்ட சிறுபான்மையினர் அந்தஸ்தை அரசு திரும்பப்பெற வேண்டும். அவர்களின் ஜனத்தொகையையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பிரதமர் மோடியின் அரசு மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் தோல்வி அடைந்துள்ளது. பணவீக்கம், வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற எதிலும் முறையாக மத்திய அரசு செயல்படவில்லை என்றும் கூறியுள்ளார்.