கேரள மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை 483 பேர் இறந்துள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் மூன்றாம் கட்ட நிவாரண பணிகள் தொடர்ந்து தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த மாபெரும் பேரிருடலிருந்து கேரளா மீண்டும் வரும் தருணத்தில் தற்போது அங்கு தொற்றுநோய்கள் பரவி வருகின்றன. அதிலும் குறிப்பாக எலிக்காய்ச்சல் பரவி இதுவரை ஐந்து நாட்களில் 23 பேர் இறந்தள்ளதாகவும் 150 மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் இதனால் மக்கள் எச்சரிக்கை மற்றும் சுகாதார வழிகளை பின்பற்றி காத்துக்கொள்ளமாறு கேரள சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், கோழிக்கோடு, பாலக்காடு, வயநாடு, திருச்சூர், திருவனந்தபுரம் மாவட்டங்களில் அடுத்தடுத்து எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரில் விலங்குகள் செத்து மிதப்பதால் எலிக்காய்ச்சல், மலேரியா, டெங்குபோன்ற தொற்றுநோய்கள் பரவி வருகிறது அதிலும் குறிப்பாக இந்த எலிக்காய்ச்சல் நீரின் மூலமாகவே பரவுகிறது எனவே மக்கள் நீரை கொதிக்கவைத்து அருந்தும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது கேரள சுகாதாரத்துறை.