Published on 14/04/2021 | Edited on 14/04/2021

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலாக ஒலித்த, இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின், 130வது பிறந்த தினம் இன்று (14.04.2021) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்தியா முழுவதிலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அண்ணல் அம்பேத்கருக்கு, மரியாதையை செலுத்தி வருகின்றனர்.
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி, அம்பேத்கர் ஜெயந்தியன்று தலைசிறந்த பாபாசாகேப் அம்பேத்கருக்கு தலை வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், "பாரத் ரத்னா டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரைப் பிரதான நீரோட்டத்திற்குள் கொண்டுவருவதற்கான அவரது போராட்டம் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஒரு முன்மாதிரியாக தொடரும்" என கூறியுள்ளார்.