Skip to main content

தொடர்ந்து சரியும் மோடியின் இமேஜ்...பிரதமர் வேட்பாளர் பிஜேபி புது பிளான்!

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

பிரதமர் மோடி தொடர் விமர்சனங்களை சந்தித்து வருவதால், நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பிஜேபியில் சில முக்கிய மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகின்றனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில்  மோடி அலை , மோடி அரசியலில் சிறந்தவர் குஜராத்தை போல இந்தியாவையும் மாற்றி காட்டுவார் என்று ஒரு பெரிய பிம்பத்தை உருவாக்கினார், மோடிக்கு அரசியல் அனுபவம் இருக்கிறது என்று அவருக்கான இமேஜ் பெரிய அளவில் இந்தியாவில் உருவாக்கபட்டது. அதற்கு அப்படியே எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இமேஜை உருவாக்கினார்கள்.சமீப காலமாக ராகுல் காந்தியின் அரசியல் பயணம் மாநில தேர்தல்களிலும், பாராளுமன்ற பிரச்சாரத்திலும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வரும் நிலையில்  கடந்த சில நாட்களாக மோடியின் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது.

 

modi



இதற்கு உதாரணமாக மேகங்கள் வழியாக ராணுவ விமானம் செல்லும் போது ரேடாரில் கண்டுபிடிக்க முடியாது. அதனால் மேக மூட்டம் இருந்த மோசமான வானிலையில் இந்திய ராணுவத்தை பாலக்கோட்டில் தாக்குதல் நடத்த வேண்டும் என்று மோடி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார் அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதற்கு அடுத்த பேட்டியில், 1988ல் நான் டிஜிட்டல் கேமராவும், இ மெயிலும் வைத்து இருந்தேன், என்று குறிப்பிட்டார். அப்போது இந்த இரண்டுமே பயன்பாட்டில் கிடையாது. மோடியின் இந்த இரண்டு பேச்சுகளும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.அதேபோல் ராஜீவ் காந்தியை ஊழல்வாதியாக இறந்தார் என்று மோடி குறிப்பிட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் இந்த பேச்சை பாகிஸ்தானியர்கள் வைத்து கலாய்த்து எடுத்துவிட்டனர். இமெயில் பேச்சை அமெரிக்கா தொடங்கி அனைத்து நாடுகளிலும் கலாய்த்து வருகிறார்கள். உலக அளவில் இந்த இரண்டு பேச்சும் பெரிய சர்ச்சையை சந்தித்துள்ளது. இந்த பேச்சுக்களால் மோடியின் இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்