காதல் என்பது மனதநேயம் என்று மார்க்ஸ் கூறிவார். இன்றைய காலக்கட்டத்தில் காதல் வன்முறை நிறைந்ததாக மாறிவிட்டது என்று கூறினாலும் கூட அது மிகையாகாது. காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசுவது, ஆயுதங்களால் தாக்குவது என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் மகாரஷ்டிர மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை தீ வைத்து எரித்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. தீக்காயங்களுடன் ஒரு வார காலமாக உயிருக்கு போராடி வந்த அங்கிதா பிசுட் என்ற அந்த இளம்பெண் இன்று மரணமடைந்தார். 24 வயதே ஆன இவர் கல்லூரி விரிவுரையாளராக இருந்து வந்தார்.
அங்கிதாவுக்கு தீ வைத்த விக்கி நக்ரால் என்ற இளைஞருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை ஒன்று உள்ளது. ஒருதலையாக அங்கிதாவை காதலித்து நக்ரால் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் குற்றவாளியை உடனேயே கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தை கட்டுக்குள்கொண்டு வந்தனர்.
காதல் என்பது ரோஜா செடியில் உள்ள ரோஜா பூவை பறித்து தலையில் வைத்துக்கொள்வதை போன்றது அல்ல; அந்த செடியிலேயே அந்த பூவை வைத்து உணரும் அந்த உணர்வுக்கு பெயர்தான் காதல் என்பதை இந்த சமூகம் என்று உணர்ந்து கொள்கிறதோ அன்று தான் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கும்.