![kiran bedi](http://image.nakkheeran.in/cdn/farfuture/iqo01p9oPoxgNTCHhT2fi8RYy6rmiA50j0xsP2UGG64/1540845360/sites/default/files/inline-images/kiran%20bedi%20pondy.jpg)
புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் சி.எஸ்.ஆர் நிதி வசூல் உட்பட பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், சுற்றுலாதுறை வாரிய தலைவருமான என.ஆர்.பாலன் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமியை உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா..? என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கேட்பது மிகவும் கீழ்த்தரமான செயல்.
![kiran bedi](http://image.nakkheeran.in/cdn/farfuture/RzujLQCT4V9JuMhdS4BIV4a6ihO5OBlParAOPs7JhyY/1540845652/sites/default/files/inline-images/351_1.jpg)
இது உரிமை மீறிய செயல். இதுகுறித்து கிரண்பேடி மீது சட்டப்பேரவை உரிமை மீறல் குழுவிடம் புகார் அளிக்க உள்ளேன். கிரண்பேடி அனைத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிடுகின்றார். அவர் எல்லாவற்றையும் வெளியிட்டால் யார் பொய் சொல்கிறார்கள் என்று தெரியும்.
கிரண்பேடி அரசு அதிகாரிகள் தான் சொல்வதை கேட்காவிட்டால் அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை நடத்தப்படும் என மிரட்டி வருகிறார்" என்று குற்றம் சாட்டினார்.