சிந்துபாத் கதை போன்று முடிவு தெரியாமல் பரவிக் கொண்டிருக்கும் கரோனாவின் மீது கடும் யுத்தம் நடத்தப்பட்டு வருகிறது. முறியடிக்கப் பல்வேறு வியூகங்கள் பாதுகாப்பு ஆயுதங்கள் அரசுகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறன்றன. மனித குலம் காக்க போராட்டமே நடந்த வேண்டிய நிலை. சமூகப் பாதுகாப்பு தொடர்பாக அதன் ஒரு பகுதியாக சமூக விலகலைக் கடைப்பிடிக்கிற வகையில், குறிப்பாகக் கூட்டம் கூடும் மதுக்கடைகள், பார்களுக்குத் தடை போடப்பட்டு விடப்பட்டது தமிழகம் மற்றும் கேரளா இரு மாநிலங்களிலும் மதுக்கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

இப்படி மதுக்கடைகள் மூடப்பட்டதால் அதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு, கள்ளத்தனமாகச் சப்ளை செய்யப்படும் நிலை பெருகிவிட அவைகளும் கேரள காவல்துறையால் தடுக்கப்பட்டுவிட்டது. இது போன்று பல்வேறு கடும் நடவடிக்கைகளால் மது சப்ளை நிறுத்தப்பட, குடித்தே பழக்கமாகி அதற்கு அடிமையாகி உடல் முழுக்க ஆல்ஹால் ஆக்கிரமிக்கப்பட்டவர்களால் குடிக்காமல் இருக்க முடியவில்லை. மது கிடைக்காமல் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு மன உளைச்சல் மன அழுத்தம் காரணமாக கேரளாவில் மட்டும் 5 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
மேலும் இது போன்ற மனநிலையில் உள்ளவர்களின் நிலையைக் கருத்தில் கொண்ட முதல்வர் பினராயி விஜயன் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு டாக்டர்களின் அறிவுரைப்படி மது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு அகில இந்திய மருத்துவர் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஏனெனில் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். அவ்வாறு நாங்கள் அறிவுறுத்த முடியாது என்று கேரள டாக்டர்கள் யூனியன் கூறியுள்ளது.
இதனிடையே திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கு மாலையில் 60.மில்லி. பிராந்தி 3 பெக் முந்திரியுடன் குடிக்க டாக்டர் பரிந்துரை செய்ததாக ஒரு மருந்துச் சீட்டு வாட்ஸ்-அப்- உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வெளியேறி பரபரப்பு சூட்டைக் கிளப்பியுள்ளது.