Skip to main content

ஆபாச வீடியோ விவகாரம்; பாஜக அமைச்சர் ராஜினாமா!

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

ramesh jarkiholi

 

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி. கர்நாடக அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இந்தநிலையில், அவர் ஒரு அடையாளம் தெரியாத பெண்ணோடு தனிமையில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சில கன்னட தொலைக்காட்சிகள் இந்த வீடியோவை ஒளிபரப்பிய நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி, அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, வேலை தருவதாக கூறி, அந்தப் பெண்ணை ஏமாற்றிவிட்டதாக காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். மேலும் அந்தப் புகாரில், ஆபாச படம் அடங்கிய சி.டி அப்பெண்ணிடம் இருப்பதைத் தெரிந்துகொண்ட அமைச்சர், அந்தப் பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்தநிலையில், ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியை, பதவி நீக்கம் செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் குரலெழுப்பிய நிலையில், ரமேஷ் ஜர்கிஹோலி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர், "எனக்கு எதிரான குற்றச்சாட்டு, உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதால், நான் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்