Published on 25/09/2019 | Edited on 25/09/2019
ஜம்மு- காஷ்மீர் விமானப்படை தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 10 பேர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தலாம் எனவும் கூறியுள்ளது.

இதனையடுத்து ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அவந்திப்போரா, ஹிண்டன் உள்ளிட்ட விமானப்படை தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சென்னை, மும்பை, கொல்கத்தா, அமிர்தசரஸ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது