Skip to main content

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.....எதிர்கட்சிகள் அதிர்ச்சி!

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

இந்தியா முழுவதும் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்றது. இதற்கான கடைசி கட்ட மக்களவை தேர்தல் நேற்று (19/05/2019) நடந்து முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியானது. இதில் நியூஸ் 18 தொலைக்காட்சி, இந்தியா டுடே, டைம்ஸ் நவ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளைப் பார்க்கலாம். மக்களவையில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் மக்களவை தொகுதியை தவிர்த்து 542 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள்.

"டைம்ஸ் நவ்" கருத்துக்கணிப்பு (Times Now Exit Poll) 
பாஜக கூட்டணி - 306 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி - 132 இடங்களையும், மற்ற கட்சிகள் - 104 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி - 29 இடங்களையும , அதிமுக-பாஜக கூட்டணி- 9 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

 

exit poll

 

 

"இந்தியா டுடே" கருத்துக்கணிப்பு (India Today Exit Poll)
பாஜக கூட்டணி - 271-298.
காங்கிரஸ் கூட்டணி - 73-104.
மற்ற கட்சிகள் - 58-80.
மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி - 34-38 இடங்களை கைப்பற்றும் எனவும், அதிமுக - பாஜக கூட்டணி - 0-4 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

நியூஸ் 18 தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு (News 18 Network Exit Poll)
பாஜக கூட்டணி - 336 .
காங்கிரஸ் கூட்டணி -124.
மற்ற கட்சிகள் -82.
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி - 22 முதல் 24 இடங்களையும், அதிமுக - பாஜக கூட்டணி - 14-16 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

 

rahul

 

 

இந்த மூன்று செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பிலும் பாஜக கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளதால், மாநில மற்றும் எதிர்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து இருப்பதும் கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்தியாவின் அடுத்தப் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக கூட்டணி : 60-62 தொகுதிகளையும், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி : 17-19 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் கூட்டணி : 1-2 தொகுதிகளை கைப்பற்றும் என நியூஸ் 18 தொலைக்காட்சிகளில் வெளியானது. இதனால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் ஆட்சி அமைப்பதோ, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மேற்கொண்டு வரும் மூன்றாவது அணி சுற்றுப்பயணத்தில் சற்று பின்னடைவாக இந்த கருத்துக்கணிப்புகள் அமைந்துள்ளன. அதே போல் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது போல் மே-23 ஆம் தேதி தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தான் முடிவு எடுக்கப்படும் என அறிவிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கருத்துக்கணிப்புகளுக்கு எதிராக பல்வேறு கட்சித்தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்