கடந்த சில நாட்களாக இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சுற்றுலா பகுதியான மணாலியில் 127.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. பீஸ் நதியில் அளவைக் கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் ஆளில்லா சுற்றுலா பஸ் ஒன்று இந்த பீஸ் நதியில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த பஸ்ஸில் ஆட்கள் இல்லை என்பதால் பெரும் உயிர் சேதம் நடந்தேராமல் தவிற்கப்பட்டுள்ளது. அதேபோல, சரக்கு லாரி ஒன்றும் இந்த வெள்ளத்தில் அடித்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
இமாச்சலில் இன்றும் கனமழை பெய்யும் என்பதால் எட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சலத்தில் ஒரு புறம் கனமழை, ஒரு புறம் கடும் பனிபொழிவு என்று இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.