
அஸ்ஸாம், கோலகாத் டவுனில் உள்ள ஒரு தனியார் ஆய்வுகூடம், யூரின் டெஸ்ட் செய்யவந்த ஆணுக்கு மகப்பேறு அறிக்கை தந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு ஜோகேஸ்வர் போரா என்கிற 42வயது விவசாயி யூரின் டெஸ்ட் எடுக்க கோலகாத் டவுனுக்கு சென்று ஒரு தனியார் ஆய்வுகூடத்தை அணுகியுள்ளார். அதுவும் இந்த சோதனையை அஸ்ஸாம் அரசாங்கத்தின் இலவச மருத்துவ ஆய்வு திட்டத்தின் கீழ் அணுகியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், சீ.டி. ஸ்கேன், எக்ஸ் ரே, இரத்தம் மற்றும் யூரின் டெஸ்ட் ஆகிய சோதனைகளை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் எந்த தனியார் ஆய்வுகூடத்திலும் எடுத்துக்கொள்ளலாம், அரசு அந்த சோதனைகளுக்கு கட்டணம் அளிக்கும். போராவும் இந்த திட்டத்தின் கீழ் யூரின் டெஸ்ட் எடுக்க, அந்த டெஸ்டில்" குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது" என்கிற முடிவு வந்துள்ளது.
போரா வேறொரு மருத்துவரை அணுகியபோது, சோதனையின் போது எதோ தவறுதலாக நடந்திருக்கிறது" என்று கூறியுள்ளார். சோதனை செய்த ஆய்வுகூடம்," வேறு ஏதோ உங்கள் சோதனையின்போது கலந்துள்ளது" என்றனர்.