இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், டெல்லி கிழக்கு தொகுதியின் பாஜக வேட்பாளருமான கம்பீர் மீது கிரிமினல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் ஏற்கனவே முடிந்த நிலையில், அனைத்து கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் டெல்லி கிழக்கு தொகுதியின் பாஜக வேட்பாளரான கம்பீர் மீது ஆம் ஆத்மீ கட்சியின் டெல்லி கிழக்கு வேட்பாளரும், அக்கட்சியின் முக்கிய தலைவருமான அடிஷி மார்லேனா கிரிமினல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
ஏற்கனவே கம்பீர் இரண்டு தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார் என சர்ச்சையான நிலையில் தற்போது இது குறித்து அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்ட இந்த விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.