Published on 06/09/2022 | Edited on 06/09/2022

மது போதையில் காவலர்கள் இருவர் சாலையில் கட்டி புரண்டு சண்டையிடும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நடு சாலையில் இரண்டு காவலர்கள் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஒரு காவலர் இருவரது சண்டையும் பிரித்து விட முயற்சி செய்யும் நிலையில், விடாப்பிடியாக இருவரும் மோதிக் கொள்ளும் காட்சிகளை வாகன ஓட்டிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.