Skip to main content

உபி அரசு அறிக்கை வெளியிட மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

Published on 14/08/2017 | Edited on 14/08/2017
உபி அரசு அறிக்கை வெளியிட மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில், குழந்தைகள் மரணத்திற்குப் பின், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை உத்தரப்பிரதேச மாநில அரசு சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதியில் தொடங்கி உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவமனையின் மூளைவீக்க நோயாளிகள் பிரிவில், ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் பற்றாக்குறையால் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் மீது அரசு என்ன ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. உபி மாநில அரசு உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு என்ன நிவாரணம் வழங்கியிருக்கிறது உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமை ஆணையத்தின் இந்த அறிக்கை உபி மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்த சம்பவம் உபி சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சுரணையற்ற தன்மை என குறிப்பிடப்பட்டுள்ளது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்