குஜராத்தின் தொழிலதிபர் அதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் கடந்த 5 வருடங்களில் மட்டும் ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை குஜராத் மாநிலத்தின் துணை முதல்வர் நிதீன் பட்டேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள தகவலின்படி கடந்த 2014-15 ஆம் ஆண்டில் 188 குழந்தைகளும், 2015-16ம் ஆண்டில் 187 குழந்தைகளும், 2016-17ம் ஆண்டில் 208 குழந்தைகளும், 2017-18ம் ஆண்டில் 276 குழந்தைகளும், 2018-19ம் ஆண்டில் 159 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இதற்கான காரணமாக பல்வேறு வியாதிகள் மற்றும் மருத்துவ சிக்கல்கள் மருத்துவமனை நிர்வாகத்தால் காரணமாக கூறப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக குறைபிரசவம், நோய் தொற்று, சுவாச கோளாறுகள், போன்றவை முக்கியமான காரணமாக கூறப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதமே இந்த குழந்தைகள் உயிரிழப்புகள் பற்றி விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.