Published on 11/09/2019 | Edited on 11/09/2019
ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. முதல் அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆளும் அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டு அறிவித்திருந்தார். அதன்படி இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடக்க இருந்தது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை வீட்டு காவலில் வைத்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷையும் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். மேலும் பேரணி நடத்த அனுமதியில்லை என்று தெலுங்கு தேசம் கட்சியின் முன்னணி நிர்வாகிகளையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். பல இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.