Published on 02/01/2023 | Edited on 02/01/2023
உத்தரப்பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி ஹர்டோய் பகுதியைச் சேர்ந்த பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்குப் பிறந்த குழந்தையினைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குழந்தையின் முதுகிலும் பக்கவாட்டிலும் முடிகள் வளர்ந்து இருந்தது. மருத்துவர்கள் உடனடியாக இது குறித்து ஆய்வு செய்தனர். அதில் அக்குழந்தை பிறவியிலேயே சரும நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
குழந்தையின் நிலை குறித்து அறிந்த ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்த்ய கார்யாக்ரம், குழந்தையை மேல் சிகிச்சைக்காக லக்னோவிற்கு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மேலும் தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் விரைவில் குழந்தை குணமடைந்து விடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.