சென்னையில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறவை மோதியதால் உடனடியாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6.47க்கு சென்னை விமனநிலையத்திலிருந்து 137 பயணிகளுடன் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 6000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் பொழுது விமான ஓட்டியினால் அதிர்வு ஒன்று உணரப்பட்டது. அந்த அதிர்வு விமானத்தின் எஞ்சின் பகுதியில் ஏதோ ஒன்று மோதிய அதிர்வாக இருக்கலாம் என யூகித்த விமான ஓட்டி உடனே விமானத்தை தரையிறக்குவதாற்கான அறிவிப்பை விமான நிலையத்திற்கு தெரிவித்தார். அதனை தொடர்ந்து விமானம் உடனே தரையிறக்கப்பட்டது.
தரையிறங்கிய விமானத்தை விமானநிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது விமானத்தின் டர்பின் பிளேடுகள் சிறிய அளவு சேதமடைந்திருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் டர்பின் பிளேட் பகுதியில் பறவையின் இறகுகள் உடைந்து ஒட்டிக்கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதனால் பறவை மோதியதால்தான் இந்த அதிர்வு ஏற்பட்டிருக்கிறது என்று உறுதி செய்தனர். மேலும் எந்த பறவை மோதியது என தீமானிக்கப்படவில்லை என்றாலும் பறவை மோதியதால்தான் இப்படியானது என்றும் கூறியுள்ளனர்.
மேலும் பறவை மோதிய இந்த அதிர்வு கும்மிடிப்பூண்டி அருகே 6000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த பொழுதே உணரப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது. துரிதமாக செயல்பட்டதால் டர்பின் பிளேடில் பறவையின் மோதலால் ஏற்பட்ட பாதிப்பு சரிசெய்யப்பட்டது. இந்த திடீர் தரையிறக்கத்தால் பயணிகள் அதிர்ந்தனர் ஆனால் எவ்விதம் சேதமும் இல்லாமல் விபத்து முன்னரே தடுக்கப்பட்டுள்ளது.