உள்ளாட்சித் தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுக கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து வேட்பு மனு தாக்கலும் தொடங்கி, நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவில் சந்தேகம் இருப்பதாக மேல்முறையீடு செய்த திமுகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் மீண்டும் தலையிட நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க அண்மையில் உச்சநீதிமன்றம் மறுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை முடித்து மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.