Published on 03/03/2018 | Edited on 03/03/2018
திருப்பதி அருகே செம்மரம் வெட்டச்சென்றதாக கைதான 84 தமிழர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
திருப்பதி அருகே ஆஞ்சநேயபுரத்தில் செம்மரம் வெட்டச்சென்றதாக 84 தமிழர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். கைதான 84 தமிழர்களில் இருவர் கல்லூரி மாணவர்கள், 42 பேர் வேலூர், 42 பேர் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள்.
விசாரணைக்கு பின்னர், செம்மரங்கள் வெட்ட வனப்பகுதிகளுக்குள் வரமாட்டோம் என 84 பேரிடம் கையெழுத்து பெற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டுள்ள 84 பேரும் 6 மாதம் வரை கண்காணிப்பில் இருப்பார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. 6 மாதம் வரை எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வர வேண்டும் என ரேணிகுண்டா வட்டாட்சியர் நரசிம்மலு நாயுடு நிபந்தனை விதித்துள்ளார்.