Skip to main content

நீர்நிலைகளை பாதுகாக்க பியூஸ் மனுஷுடன் இணைந்தார் சிம்பு!

Published on 19/04/2018 | Edited on 19/04/2018
simpu pysush

 

சமூக சேவகர் பியூஸ் மனுஸ், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் பல்வேறு ஏரிகளை மீட்டு எடுத்தும், தனிப்பட்ட முயற்சியில் காடுகளை உருவாக்கியும்  முன்னுதாரண மனிதராக திகழ்கிறார்.

இவர், ’சேலம் மக்கள் குழு’ அமைப்பை உருவாக்கி  அக்குழுவினருடன் சேலத்தில் பல்வேறு ஏரிகளை சீரமைத்திருக்கிறார். கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியினை அரசாங்கத்தின் எந்த ஒரு நிதி உதவியுமின்றி பொது மக்களை ஒன்றிணைத்து 50 லட்சம் செலவில்  அந்த பகுதி மக்களுக்கான நீராதாமாய் மாற்றியுள்ளார். சேலத்தில் இதுவரையில் மூக்கனேரி, அம்மாபேட்டை, குண்டுகள் ஏரி, இஸ்மாயில்கான் ஏரி என 4 ஏரிகள்,  அரிசிப்பாளையம், பள்ளப்பட்டியில் 2 தெப்பக்குளங்களை  அழிவில் இருந்து மீட்டெடுத்து அந்த பகுதியின் முக்கியமான நீர் ஆதாரமாக மாற்றியுள்ளார்.

 

simbu1

 

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் நடிகர் சிம்புவின் வித்தியாசமான அனுகுமுறையைக்கண்டு அவரை தொடர்புகொண்டு,  தமிழகமெங்கிலும் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து பேசினார் பியூஸ்.  சிம்புவின் அதற்கு சம்மதித்துள்ளார்.  இதையடுத்து, இன்று சேலத்தில் பியூஸ் மனுஷ் முயற்சியினால் சீரமைக்கப்பட்ட ஏரிகளை பார்வையிட்டார்.

 

 மூக்கனேரியில் இன்று நடிகர் பியூஸ் மனுஸுடன் பரிசலில் சென்று சுற்றுப்பார்த்தார் சிம்பு.  பரிசலில் சென்றபோது ஏரிகள் சீரமைப்கப்பட்டதன் விபரங்களை பியூஸிடம் கேட்டறிந்தார் சிம்பு.  இதே போல் சேலத்தில் உள்ள பல்வேறு ஏரிகளையும் பார்வையிட இருக்கிறார் சிம்பு.   இதே போல் சேலத்தில் நீண்ட நாள் பிரச்சனையாக இருக்கும் குப்பமேடு பகுதி்யையும் பார்வையிடுகிறார்.

 

simbu3

 

இது குறித்து நடிகர் சிம்பு,  ‘’மற்றவர்களை குறைசொல்லவதை விட்டுவிட்டு, நாம் எதாவது செய்யலாம் என்று பியூஸ்  சாரிடம் பேசினேன்.  மேலும், அவர் அழைத்ததின் காரணமாக சேலம் வந்துள்ளேன்.  ஏரிகளை பார்வையிட்டேன்.  இது சம்பந்தமாக அவரிடம் விரிவாக பேச உள்ளேன்.  அதன்பின்னர் அவருடான எனது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பேன்’’ என்று தெரிவித்தார்.

 

simbu2

 

இது நிகழ்வு குறித்து பியூஸ் மனுஷ்,  ‘’நீர் நிலைகளை பாதுகாத்து வரும்  வேலைகளை சிம்புவுக்கு காட்டியதில் மகிழ்ச்சி.   காவிரியை பாதுகாப்பது மற்றும் அதன் தேவை குறித்தும் விளக்கு கூறினேன்.  பலர், தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டும் என்று அறிவுப்பூர்வமாக பேசினார்கள்.  ஆனால், எதுவும் நடக்கவில்லை. சிம்பு பேசினார். பலர் அதை விமர்சித்து இருந்தாலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நல்ல மாற்றம் நிகழ்ந்தது.  நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியதிருக்கிறது.  அதை உணர்ந்ததால் நம் பயணத்தில்  சிம்புவும் கலந்துகொண்டார்’’ என்று தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்