தினகரனுக்கு ஆதரவாக 3 எம்.எல்.ஏ.க்கள் செயல்படுவதாக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை எதிர்த்து இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த நோட்டீஸ்க்கு இடைக்காலத்தடை விதித்தது. அதைத்தொடர்ந்து அந்த மூன்று எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்னசபாபதி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தது.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் இருப்பதால் நோட்டீஸை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தோம். தர்மம், நீதி வென்றது என்று சொல்லக்கூடிய வகையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்தவர்கள் நாங்கள், இந்த ஆட்சிக்கு எதிராகவோ, கட்சிக்கு எதிராகவோ நாங்கள் எந்த சூழ்ச்சியும் செய்யவில்லை. ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி கொடுத்தனர். அதிமுக ஆட்சி தொடரவேண்டும் என பாடுபட்ட எங்களுக்கு கிடைத்த பரிசுதான் சபாநாயகர் நோட்டீஸ்.