Skip to main content

மகளிர் தினத்தையொட்டி பெண் டாக்டருக்கு எம்.பி. சீட் அறிவித்த மா.கம்யூனிஸ்ட்

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

 

சா்வதேச மகளிர் தினம் நேற்று நாடு முமுவதும் கொண்டாடப்பட்டது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் கேக் வெட்டி பெரும் விமா்சையாக கொண்டாடி மகளிருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 

முன்னாள் இந்திய ஜனாதிபதி கே.ஆா்.நாராயணனின் சொந்த ஊரான கேரளா மாநிலம் கோட்டயம் உழவூா் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவா் டாக்டா் சிந்து மோள். இவா் அந்த பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த உள்ளாட்சி தோ்தலின்போது சுயேட்சையாக நின்று வெற்றி பெற்று கம்யூனிஸ்ட் ஆதரவுடன் உழவூா் மன்ற தலைவியானார்.

 

kerala


 

டாக்டா் சிந்து மோள் ஊராட்சி மன்ற தலைவியானதும், அந்த ஊராட்சி மக்களுக்கு பொற்காலமாக மாறியது. அரசு நிதியினை முமுமையாக செயல்படுத்துவதுடன் ஒருவா் கூட எந்த ஒரு குறையும் இல்லாமல் வாழ வேண்டுமென்று அக்கறையோடு செயலாற்றி வருகிறார். அடிப்படை வசதி இல்லையென்று ஒருவா் கூட குறை கூறியது இல்லை.
 

         இந்தநிலையில் வீடு இல்லாமல் இருந்த 16 ஏழை குடும்பங்களுக்கு சிந்து மோள் 2 கோடி மதிப்பிலான தனக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தில் அந்த குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுத்திருக்கிறார். இதனால் டாக்டா் சிந்து மோள் கோட்டயம் மாவட்டத்தில் அனைத்து தரப்பினரிடமும் பிரபலமாகி பொது வாழ்க்கையில் ஈடுபடுபவா்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வருகிறார். இதனால் சிந்து மோள் எந்த பகுதிக்கு சென்றாலும் அவரை காண ஒரு கூட்டம் கூடி விடும். இதனால் சிந்துவை தங்கள் பக்கம் இழுக்க அரசியல் கட்சிகள் பலா் போட்டியிட்டனா். 
 

              இந்த நிலையில் மகளீா் தினத்தையொட்டி சிந்து மோளை மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்து நேரிலும், போனிலும் பலா் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனா். இந்த சூழலில் சிந்துமோளுக்கு மகளிர் தின வாழ்த்து சொன்ன மா.கம்யூனிஸ்ட் கட்சி அவரை கோட்டயம் எம்.பி. தொகுதி வேட்பாளராக அறிவித்தது. மகளிர் தினத்தையொட்டி சிந்து மோளுக்கு கிடைத்த இந்த இனிப்பு செய்தியை கேட்டு அவா் சந்தோஷமும் படவில்லை, அதனை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் இல்லை. இதனால் அவா் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.