Skip to main content

எதிர்க்கட்சி வீடு வீடா கொடுக்குது, ஆளுங்கட்சி முடிஞ்சவரை சுருட்டுது... -வைரலான அதிமுக முன்னாள் எம்.பி. ஆடியோ

Published on 05/05/2020 | Edited on 05/05/2020

 

k c palanisamy


அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் செல்லாது எனத் தேர்தல் ஆணையத்திலும், டெல்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்ததுடன், அதிமுகவில் இருந்து தன்னை நீக்க இ.பி.எஸ் -ஓ.பி.எஸ்.க்கு அதிகாரம் இல்லை என அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி.
 

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கே.சி.பி.க்கு அதிமுக நிர்வாகி ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாக ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்புகளில் பரவுகிறது. அதில், 
 

கே.சி.பி. : கரோனா எப்படி இருக்கு உங்க பகுதியில?
 

அதிமுக நிர்வாகி : நம்ம மண்டலம் சிவப்பு மண்டலம்தான். விருதுநகர் சிவப்பு மண்டலமாக்கிட்டாங்க. 
 

கே.சி.பி. : எப்படி கவர்மெண்ட் செய்யறது மக்களுக்கு திருப்தியா இருக்குதா? சங்கடப்படுறாங்களா? 
 

அதிமுக நிர்வாகி : நம்மக்குள்ள பேசிக்குவோம்... கண்டிப்பா சங்கடப்படுறாங்க. 
 

கே.சி.பி. : ரொம்ப கஷ்டப்படுறாங்க.
 

அதிமுக நிர்வாகி : சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்குறாங்க. திமுக கட்சிக்காரங்க வீடு வீடா கொடுக்கிறத பாத்து, 'நீங்கதான் ஆளுங்கட்சி, அவன் தேடி வந்து கொடுக்குறான். நீங்க என்ன பண்ணீங்கன்னு' நம்ம மக்கள் நம்மள பாத்து கேட்குறாங்க. உட்கிராமத்துலக் கூட கொடுக்குறாங்க அண்ணா. 
 

கே.சி.பி : ஆமா... ஆமா... அவன் பட்டையா பிண்ணி எடுக்குறான்.
 

அதிமுக நிர்வாகி : நான் கூட ஒரு பையனுக்கு அந்த ஆப்பை அப்ளை பண்ண சொல்லி, அட்ரஸை அனுப்புன்னு சொன்னேன். உடனே ராஜபாளையம் எம்எல்ஏ ஒரு ஜீப்புல வந்து 'தளபதி அலுவலகத்திற்கு சொன்னீங்களாமேன்னு' சொல்லி அந்தப் பையனுக்கு உதவிட்டு போயிருக்காங்க. அந்தப் பையன் சொன்னான். 


கே.சி.பி. : 100 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் மக்கள் கஷ்டப்படுறாங்க. சாப்பாட்டுக்கு கஷ்டப்படுறாங்க.
 

அதிமுக நிர்வாகி : நாம சரியா பண்ணுல அண்ணா. 
 

கே.சி.பி. : இவுங்க நிறைய கொள்ளையடிச்சி வைச்சிருக்காங்க கொடுக்கலாம். எலெக்சன் நேரத்துல ஓட்டுக்கு 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரங்குறானுங்க. இப்ப இறக்க வேண்டியதுதானே நல்லா. 
 

அதிமுக நிர்வாகி : ஆனா இவுங்க (திமுக) நீங்க ஓட்டுப்போடுங்க, ஓட்டுப் போடாம போங்க, எங்க கடமை நாங்க செஞ்சுடுறோமுன்னு கிராமத்துல சாதாரண வார்டு மெம்மர் கூட வீடு வீடா கொடுத்துட்டு போறான். 
 

கே.சி.பி. : ஆமா... ஆமா... அவுங்க புல் தெம்புல இருக்காங்க. ஆட்சிக்கு வந்துருவோம்முன்னு... ரெண்டு விஷயம் தெளிவா போகுது. திமுககாரன் ஆட்சிக்கு வந்துருவோங்கிற தெம்புல இருக்குறான். இவுங்க இன்னும் ஒரு வருஷம் இருக்கு அதுக்குள்ள எவ்வளவு பணம் பண்ண முடியுமோ, பண்ணுவோமுன்னு இருக்காங்க. 
 

அதிமுக நிர்வாகி : ஆனா வரமாட்டோம் எனத் தெரிஞ்சுதான் பண்றாங்க இவுங்க. எப்படி அண்ணா? நாளைக்கு ராஜேந்திரபாலாஜி சொல்ற மாதிரி டாடி ரெய்டு விட்டு புடுங்கிட்டாருன்னா?


கே.சி.பி. : அதெல்லாம் அதுக்கு ஒரு ரேட்டை பிக்ஸ் பண்ணி கொடுத்து சரி பண்ணிக்குவாங்க. கால்ல விழுவதுக்கோ, கால வாற்றதுக்கோ தயக்கம் கிடையாது. பேசிக்காக ஒரு பிரின்ஸ்புல் இருக்கணும். இதுதான் கொள்கைன்னு கிடையாதுல்ல. 
 

அதிமுக நிர்வாகி : கண்டிப்பா... கண்டிப்பா... ஆமா... 
 

http://onelink.to/nknapp

 

கே.சி.பி. : முடிஞ்ச வரைக்கும் சுருட்டுறது. மாட்னா கைய, கால புடுச்சி தப்பிச்சுக்கலாங்கிறதுதான் இவுங்களோடது.  இவ்வாறு செல்கிறது அந்த ஆடியோ. 
 

 

இதுதொடர்பாக கே.சி.பழனிசாமி நம்மிடம், ''மக்கள் 100, 200 ரூபாய்க்கு கஷ்டப்படுறாங்க. எலெக்ஷ்ன் நேரத்துல இரண்டு கட்சிக்காரங்களும் 3 ஆயிரம், 2 ஆயிரமுன்னு கொடுக்குறத, இந்த நேரத்துல கொடுத்தால் மக்களோட கஷ்டம் தீருமேன்னு சொன்னேன். அந்த ஆடியோவில் நான் பேசியது குறைச்சலா இருக்கு. அவர் பேசியது அதிகமா இருக்கு. கே.சி.பழனிசாமி அண்ணா வணக்கம் என பேச்சை தொடங்குகிறார். அதனாலத்தான் என்னை தொடர்பு கொண்டவர் அதிமுககாரரா எனச் சந்தேகமாக இருக்கிறது. தினந்தோறும் நிறைய பேர் பேசுறாங்க. கருத்து கேட்கிறோம். பகிர்ந்து கொள்கிறோம். அதிமுக, திமுவைவிட சிறப்பாகச் செயல்படணும் என்ற எதிர்பார்ப்புலதான் சொல்றோம். அடுத்த வீட்டு பையன் நல்லா படிக்கிறான்னு சொல்றோம். எதுக்காக? அவனை விட நம்ம வீட்டுப் பையன் நல்லா படிக்கணும் என்ற நல்லெண்ணத்தில் சொல்கிறோம். நான் என்றைக்கும் அதிமுககாரன்தான்'' என்கிறார் அழுத்தமாக. 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.