Skip to main content

ஜெ.வை கொச்சைப்படுத்திய பேச்சை ரசிக்கிறார்களா ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.: சி.ஆர்.சரஸ்வதி கண்டனம் 

Published on 19/06/2018 | Edited on 19/06/2018
cr saraswathi

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி பேசிய திண்டுக்கல் சீனிவாசனை முதல்வரும், துணை முதல்வரும் கண்டிக்காதது ஏன்? வரவேற்கிறார்களா? என்று கண்டனம் தெரிவித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி.

 

 

 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அதிமுக சார்பில் காவிரி மீட்பு போராட்டம் வெற்றி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திருடி டிடிவி தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களும் கொடுத்து வருகிறார் என கூறியது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய சி.ஆர்.சரஸ்வதி,
 

இன்று உள்ள ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அரசு மாதிரி ஒரு துரோக அரசை பார்த்ததே இல்லை. ஜெயலலிதாதான் இவர்களுக்கு அரசியல் முகவரி கொடுத்தார். 10 வருடங்களுக்கு மேலாக திண்டுக்கல் சீனிவாசனை ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். 12 வருடமாக அவரை ஜெயலலிதா திரும்பியே பார்க்கவில்லை. 
 

பெத்த பிள்ளைகள் மீது சத்தியமா அம்மாவை பார்த்தேன் என்றார் திண்டுக்கல் சீனிவாசன். பதவி போய்விடும் என்று சொன்னவுடன் பிள்ளைகள் மீது சத்தியம் பண்ணியதை வட மறந்துவிட்டு, நான் பேசியது பொய் மன்னித்துவிடுங்கள் என்றார்.  

 

 

 

2016 தேர்தலின்போது சசிகலா சிபாரிசில்தான் திண்டுக்கல் சீனிவாசனுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதை நான் நேரில் விவாதிக்க தயார். இல்லை என்று அவரால் சொல்ல முடியுமா?. போட்டியிட வாய்ப்பு கொடுத்தவரையே கொள்ளையடிச்சதாக பேசுகிறாரே, இன்று இவர்கள் அடிக்காத கொள்ளையா? 
 

கொள்ளையடிப்பதற்காகவே இந்த ஆட்சியை நடத்துகிறார்கள். கொள்ளையடிப்பதை தவிர வேறு எந்த பணிகளையும் அவர்கள் செய்யவில்லை. அம்மாவையே கொச்சைப்படுத்தி பேசிவிட்டு பிறகு ஏன் அம்மாவின் அரசு, அம்மாவின் ஆட்சி என்று சொல்கிறீர்கள்?. 
 

திண்டுக்கல் சீனிவாசன் இவ்வளவு பேசுகிறார். அதனை முதல்வரோ, துணை முதல்வரோ கேட்க முடியாதா?. அந்த பேச்சை வரவேற்கிறார்களா?. ரசிக்கிறார்களா?. கேட்க முடியாது. ஏனென்றால் பயம். ஏதாவது கேட்டால் விலகி போய்விட்டால் ஆட்சி போய்விடும் என்ற பயம். யார் என்ன வேண்டுமானாலும் பேசுங்க. ஆட்சி இருக்கணும், பதவி இருக்கணும் என்று நினைக்கிறார்கள் இந்த ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். 

 

 

 

அம்மாவை கொச்சைப்படுத்தி பேசிய திண்டுக்கல் சீனிவாசனை கண்டிக்காமல் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இருக்கிறார்கள் என்றால், நாளை அவர்களும் அம்மாவை கொச்சைப்படுத்திதான் பேசுவார்கள் என்பதற்கு இதை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். நாளை அம்மா யார் என்று கேட்பார்கள் இந்த ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். 
 

அம்மா யாரு, நாங்கதான் அம்மாவ கொண்டுவந்தோம். அவுங்க யாரு எங்களுக்கு வாழ்வு கொடுக்க என்று இந்த ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். பேசுவார்கள். உண்மையிலுமே அம்மா மீது விசுவாசம் இருந்தால் திண்டுக்கல் சீனிவான் மீது ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.