Skip to main content

ஜோதிமணி எம்.பி. குறித்த கரு. நாகராஜன் விமர்சனத்துக்கு பா.ஜ.க.வினர் யாராவது கண்டனம் தெரிவித்தார்களா..? - அருள்மொழி கேள்வி!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

jh


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 57 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 4000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்நிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட கரூர் எம்பி ஜோதிமணி பிரதமர் குறித்து பேசியது சர்ச்சையானது. இதுதொடர்பான கேள்விக்கு வழக்கறிஞர் அருள்மொழி கூறியதாவது,
 


கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பிரதமர் பற்றியும், ஆளும் அரசைப் பற்றியும் ஒரு கருத்து முன்வைக்கிறார். அதற்கு எதிர்விமர்சனம் வைத்த பா.ஜ.க.வை சேர்ந்த செய்தித்தொடர்பாளர் கரு.நாகராஜன் ஜோதிமணி குறித்து ஒரு தவறான வார்த்தையை உபயோகிக்கிறார். ஒரு பிரதமரை இப்படிப் பேசலாமா என்று ஜோதிமணிக்கு எதிர் தரப்பினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த விஷயத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

பிரதமரைப் பற்றியோ அல்லது அவர்களின் கட்சியைப் பற்றியோ யாரும் பேசக்கூடாது என்பதே பா.ஜ.க. மற்றும் அவர்களது ஆதரவாளர்களாகக் காட்டிக்கொள்ளும் நபர்கள் அமைத்துள்ள திட்டம். அந்தத் திட்டத்தின் படி இந்த அரசையோ அரசில் இருக்கும் அமைச்சர்களையோ யாரும் குற்றம் சொல்லக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் அந்த விவாதத்தில் என்ன சொல்லியிருகிறார்கள், நாங்கள் எல்லாம் மக்களோடு மக்களாக இருக்கின்றோம். அவர்களுக்குத் தேவையானவற்றைத் தந்து கொண்டு இருக்கின்றோம். நாங்கள் அப்படிச் செய்து கொண்டு இருப்பதால்தான் மக்கள் உங்களைக் கல்லால் அடிக்காமல் இருக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.  
 

 


மக்கள் பிரதமரை எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள் என்பதை அவர் அந்த சொல்லின் மூலம் கூற வருகிறார். இது எப்படி வன்முறையைத் தூண்டுகின்ற பேச்சாக மாறும் என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். இந்த வார்த்தையை ஒரு ஆண் கூறியிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள். இதை இரண்டு வகைகளில் நாம் பார்க்க வேண்டும். ஒன்று எதிர்கேள்வி வைப்பவர்களை தாக்குதல் மூலம் பேசமால் இருக்க வைக்கும் பாசிச புத்தி, மற்றொன்று பெண் என்பதால் தனிபட்ட முறையில் அத்துமீறி பேசும் முறை. இது இரண்டையும் அவர்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். 

எல்லா கட்சியில் இருப்பவர்கள் குறித்தும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றதே? தமிழிசையில் ஆரம்பித்து நிர்மலா சீதாராமன், கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்டவர்கள் மீது விமர்சனம் வைக்கப்பட்டு வருகின்றதே?
 

http://onelink.to/nknapp


விமர்சனங்கள் வந்துகொண்டே தான் இருக்கும். தமிழிசை பற்றி அவர்களின் தோற்றம் பற்றி விமர்சனம் வருகின்ற போது நாங்கள் எல்லாம் ரொம்ப வருத்தப்படுவோம். எங்களுக்கு தெரிந்த நபர் அவ்வாறு விமர்சனம் செய்தால் அவர்களிடம் நாங்கள் அவ்வாறு செய்யாதீர்கள் என்று கூறுவோம். இது கூட அவர்கள் தோற்றத்தைப் பற்றி விமர்சனம் தானே கேரக்டர் பற்றிய விமர்சனம் அல்ல. இருந்தாலும் அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டவர் ஆசிரியர் வீரமணி அவர்கள். குறைந்த பட்சம் பா.ஜ.க. தரப்பில் இருந்து இந்த விஷயத்துக்கு அவரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்களா? குறைந்தது கண்டனமாவது இவர்களை மாதிரியான ஆட்களுக்குத் தெரிவித்துள்ளார்களா? அல்லது மகளிர் அணியினராவது கண்டனம் தெரிவித்துள்ளார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கின்றது. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளது எல்லாம் பொதுப்படையான கருத்து, நேரடி கண்டனங்கள் தெரிவித்துள்ளார்களா என்பதுதான் இங்கு பார்க்கப்பட வேண்டும். 

 

 

Next Story

''ராகுல் காந்தியே வருக... புதிய இந்தியாவை தருக...''-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
"Rahul Gandhi come... bring a new India..."- Chief Minister M.K.Stal's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி தற்பொழுது கோவை வந்துள்ள நிலையில் இருவரும் ஒரே மேடையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''கோவை தொகுதியில் திமுகவினுடைய வேட்பாளராக போட்டியிடும் கணபதி ராஜ்குமார் இந்த மண்ணின் மைந்தர். கோவையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக பணியாற்றியவர். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களித்து வாக்களிக்க வேண்டும். வெற்றி என்றால் சாதாரண வெற்றி அல்ல மாபெரும் வெற்றியை தர வேண்டும். மார்ச் 24 ஆம் தேதி என்னுடைய பரப்புரை பயணத்தை திருச்சியில் தொடங்கினேன். ஒவ்வொரு கூட்டமும் மாநாடு போல நடந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்தக் கோவை பொள்ளாச்சி கூட்டத்தையும் வெற்றிவிழா மாநாட்டை போல ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் முத்துசாமி, சுவாமிநாதன் மற்றும் செந்தில் பாலாஜிக்கும் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டம் மாநாடு போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இதற்கு இந்தியாவின் உடைய இளம் தலைவர் ராகுல் காந்தி மகுடம் வைத்தது போல இங்கே பங்கேற்றுள்ளார். நாடு சந்திக்க இருக்கக்கூடிய இரண்டாம் விடுதலைப் போராட்டத்தின் காங்கிரஸ் கட்சியினுடைய கைகளை திமுக வலுப்படுத்தும். திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இருக்கின்ற கூட்டணி கட்சி. அதே நேரத்தில் எப்பொழுதும் வெல்லும் கூட்டணி நம் கூட்டணி. சோனியா காந்தி மீதும், சகோதரர் ராகுல் காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தனியாக அன்பும் பாசமும் கொண்டவர்கள். அப்படிப்பட்ட ராகுலை நம்ம ஸ்டைலில் வரவேற்க வேண்டுமென்றால், 'ராகுல் அவர்களே வருக புதிய இந்தியாவிற்கு விடியல் தருக' என இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து நான் வரவேற்கிறேன்.

பாஜக வந்தால் கோவையின் அமைதி போய்விடும். ஜி.டி.நாயுடு பெயரில் கோவையில் நூலக அரங்கம் அமைக்கப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்டம் திருப்பூர் வரை நீட்டிக்கப்படும். திமுக அரசின் நெருக்கடி காலத்திலேயே இவ்வளவு செய்கிறோம் என்றால் இந்தியா கூட்டணி வந்த பிறகு நிறைய செய்வோம். மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது'' என்றார்.

Next Story

“நாட்டைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்” - ஜோதிமணி தீவிர பிரச்சாரம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Jothimani during campaign for Vote for Congress to save the country

கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் நாட்டை காப்பாற்ற வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதிமணி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கரூர் மாவட்டம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் சட்டமன்றத் தொகுதி, ஆண்டா கோயில் மேல்பாகம் மற்றும் கீழ் பாகம் ஊராட்சிகளில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சின்ன ஆண்டாங்கோயில் ரோடு எஸ்பிஐ காலனி பகுதியில் வாக்கு சேகரிக்க வருகை தந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு பொதுமக்கள், பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து பேசிய ஜோதிமணி, “தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற தேர்தலில், வாக்களிக்கும் போது வாக்காளர்கள் ஒவ்வொரு பிரச்சனைகளையும் பார்த்து அதை தீர்க்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்கள். இந்தத் தேர்தலில் இந்திய நாட்டை பத்து ஆண்டுகளாக ஆண்ட பாரதிய ஜனதா கட்சி பிடியிலிருந்து மீட்பதற்கு, வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். அப்பொழுதுதான் நரேந்திர மோடி அரசு அகற்றப்படும். தமிழகத்தில் திமுக ஆதரவளிக்கும் ஒரு அரசு மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், இம்முறை அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.

ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சமையல் எண்ணெய்  90 ரூபாய்க்கு விற்பனையானது, தற்பொழுது ரூபாய் 300-க்கும் விற்பனையாகிறது. ரூ. 410க்கு விற்பனையான சமையல் எரிவாயு சிலிண்டர் தற்பொழுது 1200 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ரூபாய் 500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வேலைவாய்ப்பின்மை அதிகரித்ததால் கல்விக் கடன் பெற்று, கல்வி பயின்ற இளைஞர்களை, வங்கிகள் ஜப்தி நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நரேந்திர மோடி அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல் கல்விக்கடனை ரத்து செய்யாமல் ஏமாற்றிவிட்டது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மாணவர்களின் கல்விக் கடன் முழுவதும் ரத்து செய்யப்படும்” என ஜோதிமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சிகளான திமுக மற்றும் மக்கள் நீதி மையம், விடுதலை சிறுத்தைகள் மற்றும் சிபிஐ, சிபிஎம் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்