/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/D_6.jpg)
செவன் மெய்ல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்திற்கும் படத்திற்கு “மிஸ் யூ” என்று பெயர் வைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடிக்கிறார். இதில், தெலுங்கு, கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகையான ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், லொள்ளு சபா மாறன், சஸ்டிகா என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மாப்ள சிங்கம், களத்தில் சந்திப்போம் போன்ற கமர்ஷியல் படங்களை இயக்கிய N.ராஜசேகர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை காதல், ஆக்சன், காமடி என முழுநீள பொழுதுபோக்கு படமாக உருவாக்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் ‘தமதம’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. மோகன் ராஜன் எழுதியுள்ள இப்பாடலை யாழின் நிஷார், குரு ஹரிராஜ் பாடியுள்ளனர். நாயகியின் பிம்பத்தினை நாயகன் வியந்து பார்க்குமளவிற்கான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)