Skip to main content

கேக் வெட்டி கொண்டாடிய சசிகுமார்

Published on 03/01/2025 | Edited on 03/01/2025
sasikumar tourist family movie shoot wrapped

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்து வரும் இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். ஷான் ரோல்டன் இசையமைப்பில் இப்படம் உருவாகிறது. 

இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் கடந்த மாதம் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. டைட்டில் டீசரில் சசிகுமாரின் குடும்பம் சில காரணங்களால் தங்கியிருந்த வாடகை வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ஓட தயாராகின்றனர். அப்போது நடக்கும் சம்பவங்களை கலகலப்பாக சொல்லும் விதமாக அமைந்திருந்தது. வீட்டை விட்டு போன பிறகு அவர்களின் பயணம் என்ன ஆனது என்பதை காமெடியாக சொல்லியிருப்பது போல் இப்படம் உருவாகிவருவதாகத் தெரிந்தது. மேலும் டீசரில் இலங்கை தமிழில் அனைவரும் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. 

இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஏற்கனவே இந்தாண்டு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்