Skip to main content

அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
 Incident at Athulya Ravi's house

‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அதுல்யா ரவி. அதன் பின்னர் இவர், ஏமாளி, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை  போன்ற படங்களில் நடித்து வந்தார். மேலும், இவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். 

கோவையைச் சேர்ந்த அதுல்யா ரவி, தனது தாயார் விஜயலட்சுமியுடன் வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அதுல்யா ரவி வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2000 பணம் திருடு போயியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதுல்யா ரவியின் தாயான விஜயலட்சுமி வடவள்ளி காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் குறித்து புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், அதுல்யா ரவி வீட்டில் வேலை பார்க்கும் செல்வி(46) என்பவரை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்வி முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பாஸ்போர்ட் மற்றும் பணத்தை திருடியுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி(40) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1,500 பணத்தை கைப்பற்றினர். மேலும், அவர்களிடம் பாஸ்போர்ட் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

'நீ இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்' - ஏக்கத்தில் ஜெய்

Published on 03/08/2022 | Edited on 03/08/2022

 

jai athulya ravi in Yenni Thuniga movie video song released

 

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் ஜெய் 'பட்டாம்பூச்சி' படத்தை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி இயக்கும் ''காஃபி வித் காதல்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'எண்ணித்துணிக' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலி நாயர் உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானது. 

 

இந்நிலையில் 'எண்ணித்துணிக' படத்தின் 'என்னடி பெண்ணே' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. கதாநாயகி அதுல்யாவை காதலிக்கும் ஜெய், அதுல்யாவை எப்படி காதலிக்கிறார் என்பதை விவரிக்கும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. மேலும் காதலர்களிடம் நல்ல வரவேற்பையும் இப்பாடல் பெற்று வருகிறது. இப்படம் நாளை (04.08.2022) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

“நடிகருடன் கார் பயணம்; ரோட்டுக்கடை உணவு” - அனுபவத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

andrea jeremiah talk about vattam movie

 

மாயோன் படத்தை தொடர்ந்து சிபிராஜ் ரேஞ்சர் மற்றும் வட்டம் ஆகிய இரு படங்களிலும் நடிக்கிறார். இதில் வட்டம் படத்தை கமலக்கண்ணன் இயக்க, ஆண்ட்ரியா, அதுல்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ள இப்படம் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.  இப்படம் வரும் 29 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

 

இதனையொட்டி இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சிபிராஜ், "வட்டம் எனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்தது, எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து கதையை மையப்படுத்தி படம் எடுத்து வருகிறார்கள். இந்த கதையை நான் கேட்கும் போது, நான் செய்து கொண்டு இருந்த படங்களிலிருந்து மாறுபட்டு, இந்த கதை ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்தது. இயக்குநர் கமலகண்ணன் மற்றும் கவிநயம் இந்த படத்தை எழுதியுள்ளனர். படத்தின் திரைக்கதை சிறப்பாக இருந்தது.  இயக்குநர் கமலக்கண்ணன், மிக சிறப்பாக படத்தை எடுத்துள்ளார். இது எனது முதல் ஓடிடி படம், முதல் படமே டிஸ்னி போன்ற பெரிய தளத்தில் அமைந்தது மகிழ்ச்சி. நான் ஆண்ட்ரியா உடைய மிகப்பெரிய ரசிகன், அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஜூலை 29 இந்த படம் வருகிறது. படத்தை பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

இவரை தொடர்ந்து பேசிய ஆண்ட்ரியா, "ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம் தான் இந்த படத்தை இவ்வளவு நாள் தாங்கி பிடித்து இருந்தது. நிவாஸ் உடைய பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவில் காரில் ஷூட்டிங்கில் சுற்றி ரோட்டுக் கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கமலக்கண்ணன் படத்தை மிக தெளிவாக எடுத்துள்ளார்" என்றார்.