Skip to main content

வெளிவந்த துணிவு ரிசல்ட்! ‘சரணம் ஐயப்பா...’ என்று மலையேறிய இயக்குநர் ஹெச்.வினோத்!

Published on 13/01/2023 | Edited on 13/01/2023

 

H. Vinoth Sabarimala trip

 

பொங்கலை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்க தமிழின் உச்ச நட்சத்திரங்கள் நடித்த இரு திரைப்படங்கள் வெளியாகின. இதில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் அஜித் உடன் இணைந்த மூன்றாவது படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆன்மீகத்தில் தீவிரப் பற்று கொண்ட ஹெச்.வினோத் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்தார். துணிவு புரொமோசன் வீடியோக்கள் எல்லாவற்றிலுமே மாலை போட்டு விரதமிருக்கும் காவி வேட்டியுடனும் மாலையுடனுமே காட்சி அளித்தார். இந்நிலையில், துணிவு திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் சாமியே சரணம் ஐயப்பா என்று இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு யாத்திரைக்கு புறப்பட்டு விட்டார். இதனை கத்துக்குட்டி, உடன்பிறப்பு இயக்குநர் சரவணன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துணிவு பட நடிகர் மறைவு - திரையுலகினர் இரங்கல்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
thunivu movie actor Rituraj Singh passed away

சின்னத்திரையில் பல்வேறு இந்து தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரிதுராஜ் சிங். தொடர்கள் மட்டுமல்லாது சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான துணிவு படத்தில் நடித்திருந்தார். 

சமீபத்தில் வயிற்றில் சில பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று (20.02.2024) நள்ளிரவு 12.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். அவருக்கு வயது 59. ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன. 

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

அதிகாலை காட்சி விவகாரம் - தள்ளுபடி செய்த நீதிமன்றம்

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

rohini theatre varisu thunivu morning shoe issue update

 

கடந்த பொங்கலை முன்னிட்டு விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு படம் வெளியானது. இத்திரைப்படம் சென்னை ரோகிணி திரையரங்கில் கடந்த ஜனவரி 11ம் தேதி அதிகாலை காட்சி திரையிடப்பட்டதாகக் கூறி 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார் சென்னை மாநகரக் காவல் ஆணையர். 

 

இந்த உத்தரவை எதிர்த்து ரோகிணி திரையரங்கு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதில், கடந்த ஜனவரி 11ம் தேதி அதிகாலை 1 மணிக்கும், 4 மணிக்கும் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த முறையான விசாரணையும் நடத்தாமல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் திரையரங்குகளை 24 மணி நேரமும் திரையிட முடியும் என்கிற அடிப்படையிலேயே அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை சார்பில், கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் திரையரங்குகளில் சினிமா காட்சிகளைத் திரையிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. இரு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம்  ரோகிணி திரையரங்கு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தது.