இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜெயிலர்’. இப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில்குமார், தமன்னா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியான இப்படம், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை வெற்று அந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இதற்கிடையில் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக சில மாதங்களாக தகவல் வெளியாகி வந்தது. இதையொட்டி, கடந்த தினங்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அப்டேட்களை வெளியிட்டு வந்தது.
இந்த நிலையில், அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படத்தின் டீசரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. 4 நிமிடம் கொண்ட அந்த டீசரில், நெல்சன் மற்றும் அனிருத் பேசிக் கொண்டிருக்கும் போது பல பேர்களை துப்பாக்கியால் சுட்டபடி ரஜினிகாந்த் எண்ட்ரி தருகிறார். இந்த படத்தின் கூடுதல் அப்டேட்களை இனிவரும் நாட்களில் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.