Skip to main content

சர்ச்சையை ஏற்படுத்திய கவுண்டம்பாளையம் படம்; யூ டர்ன் அடித்த ரஞ்சித்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Controversial movie Koundampalayam

‘சிந்துநதிப் பூ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஞ்சித். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கதாநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இவர் கடந்த 2003ஆம் ஆண்டு பீஷ்மர் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. 

இதனையடுத்து, நீண்ட நாட்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த ரஞ்சித், சின்னத்திரை தொடரில் நடித்து வந்தார். இந்த நிலையில், ரஞ்சித் தற்போது ‘கவுண்டம்பாளையம்’ என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். ஸ்ரீபாசத்தாய் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இந்த டீசரில் மறைமுகமாக ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவுப்படுத்தியிருப்பதாகவும், விசிக தலைவர் திருமாவளவனை தாக்கி பேசியிருப்பதாகவும் கூறப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

இந்தப் படம், நாளை (05-07-24) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை வெளியாகாது என ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது, “கவுண்டம்பாளையம் திரைப்படத்தை வெளியிடக்கூடாது எனத் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். இதனால், நாளை படம் வெளிவராது. இது தொடர்பாக சென்னைக்கு சென்று அங்கு அமைச்சர்கள், காவல் உயர் அதிகாரிகளைச் சந்தித்து மனு அளிக்கவுள்ளேன்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

கொள்கையை விட்டுக்கொடுக்காதவர் தினகரன்: அமமுகவில் இணைந்தார் நடிகர் ரஞ்சித்

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

 

பாமக துணைத் தலைவராக இருந்த நடிகர் ரஞ்சித் அக்கட்சியில் இருந்து நேற்று விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார். 
 

இதுகுறித்து அவர், ''தன்னம்பிக்கை, ஆளுமை, தைரியம் உள்ள ஒரே தலைவர் தினகரன்தான். ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு எல்லோராலும் விரும்பப்படுபவர் தினகரன். வாக்கு வாழ்க்கையையே மாற்றும், அந்த வாக்குகள் அமமுகவுக்கு கிடைக்க கடுமையாக உழைப்பேன். கூட்டணி, பேரம் பேசுதல் எந்த விதத்திலும் கொள்கையை விட்டுக்கொடுக்காதவர் தினகரன்'' என்றார்.


 

actor ranjith ttv



பின்னர் பேசிய தினகரன், ''ஜாதி மதற்ற தலைவர் என்ற ரஞ்சித்தின் கூற்றை உண்மையாக்கும் விதத்தில் நடந்து கொண்டிருக்கிறோம். புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகதான் போட்டியிடுகிறது. காவல்துறை அனுமதி அளித்த இடங்களில்தான் மக்களை சந்திக்கிறோம். வேண்டுமென்றே வழக்கு போடுகின்றனர். திமுக - காங்கிரஸ் கூட்டணியை பலமான கூட்டணியாக மக்கள் பார்க்கவில்லை. ஈழப்பிரச்சனை, மீத்தேன் பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான். பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளுமே ஜெயலலிதாவுக்கு எதிராக பேசிய கட்சிகள்தான். அவர்களுடன் அமமுக எப்படி கூட்டணி வைக்க முடியும்?'' என்றார்.  
 

 

 


 

Next Story

பாமகவில் பிரபல நடிகர்! வரவேற்ற ராமதாஸ்!

Published on 23/07/2018 | Edited on 23/07/2018
ranjith

 

அதிமுகவில் இருந்த நடிகர் ரஞ்சித், ராமதாஸ் மற்றும் அன்புமணி முன்னிலையில் பாமகவில் இணைந்துள்ளார். 

 

ஆர்.கே.செல்வமணியின் பொன்விலங்கு படத்தின் மூலம் அறிமுகம் ஆன ரஞ்சித், நேசம் புதுசு, சிந்துநதிப்பூ, பாண்டவர் பூமி, சபாஷ், பசுபதி ராசக்கா பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  நேசம் புதுசு படத்தில் நடித்தபோது பிரியா ராமனை காதலித்து கல்யாணம் செய்துகொண்டார்.  இத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது.  

 

அதிமுகவில் இருந்த ரஞ்சித், ஜெ.வின் மறைவிற்கு பிறகு ஓபிஎஸ் அணிக்கு தாவினார்.  ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக தொலைக்காட்சி விவாதங்களில் எல்லாம் பங்கேற்றார். 

 

இந்நிலையில், ராமதாஸ் முன்னிலையில் பாமகவில் இணைந்துள்ளார் ரஞ்சித்.