ஜூன் மாதம் நடக்கவிருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான அட்டவணை ஐசிசியால் வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் டி20 உலக கோப்பை ஆனது இந்த வருடம் ஜூன் மாதம் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் 1ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த டி20 உலகக்கோப்பையின் அட்டவணையானது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த உலகக்கோப்பையில் 20 அணிகள் மொத்தம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் சி பிரிவில் நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், உகாண்டா மற்றும் பப்புவா நியூகினியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் டி பிரிவில் தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் இந்திய அணி ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்துடனும், ஜூன் 9ஆம் தேதி பாகிஸ்தானுடனும், ஜூன் 12-ம் தேதி அமெரிக்காவுடனும், ஜூன் 15ஆம் தேதி கனடாவுடனும் மோத உள்ளது.
டி20 உலக கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவும் கனடாவும் நியூயார்க்கில் மோத உள்ளது. இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியுற்று ஏமாற்றத்தை தந்தாலும், டி20 தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் டி20 உலக கோப்பையையாவது இந்தியா வென்று தரவேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வெ.அருண்குமார்