Skip to main content

இந்தியா அணி வீரர் தினேஷ் கார்த்திக் அவுட்!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019


உலக்கோப்பை முதல் அரையிறுதி தொடரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்திய அணி 30 /4 (11 ஓவர்) எடுத்துள்ளது. தினேஷ் கார்த்திக் 6 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

 

 

semi final india player dhinesh karthik out

 

 

 

Next Story

சாதனை வெற்றியுடன் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

india vs newzealand

 

இந்தியா - நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மூன்றாம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது.

 

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 325 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 62 ரன்களுக்கு சுருண்டது. இதன்பின்னர் ஃபாலோ ஆன் தர வாய்ப்பிருந்தும் மீண்டும் பேட்டிங் செய்த இந்திய அணி, 276 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

 

இதன் காரணமாக 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கோடு களமிறங்கிய நியூசிலாந்து அணி, நேற்றைய (05.12.2021) ஆட்ட நேர முடிவில் 140 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்தநிலையில், இன்று ஆட்டம் தொடங்கியதிலிருந்தே நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி, 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

ரன்களின் அடிப்படையில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இது இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பெறும் 14வது டெஸ்ட் தொடர் வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

இரட்டை இலக்கத்தை தொட்ட இரண்டே வீரர்கள்... 70 ரன்களை கூட தொடாத நியூசிலாந்து! 

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

india vs newzealand

 

இந்தியா - நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (03.12.2021) தொடங்கி நடைபெற்றுவருகிறது.

 

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 325 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இந்திய அணி சார்பில் மயங்க் அகர்வால் 150 ரன்களும், சுப்மன் கில் 44 ரன்களும், அக்ஸர் படேல் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் வீழ்த்தி வரலாறு படைத்தார். இதன்மூலம் அவர், ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

 

இதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் டாம் லாதமும், ஜேமிசனும் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.

 

நியூசிலாந்து எடுத்த 62 ரன்கள், இந்தியாவில் நடைபெற்ற போட்டியில் ஒரு இன்னிங்சில் எடுக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது. மேலும், இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி ஒரு இன்னிங்சில் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து ஃபாலோ ஆன் தர வாய்ப்பிருந்தும் இந்திய அணி மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. ஃபீல்டிங்கின்போது காயமடைந்த சுப்மன் கில்லுக்கு பதிலாக புஜாரா, மயங்க் அகர்வாலோடு இணைந்து களமிறங்கியுள்ளார்.