Skip to main content

கேப்டனுக்கு வழிவிடுங்க கோச்! - சவுரவ் கங்குலி காட்டம்

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
India

 

 

 

கிரிக்கெட் என்பது கேப்டன்களின் விளையாட்டு, பயிற்சியாளர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார். 
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, எ சென்சுரி இஸ் நாட் எனஃப் என்ற தனது புத்தகம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை பயிற்சியாளர்கள் கேப்டனுக்கு வழிவிட்டு, பின் இருக்கையில் அமர்ந்துகொள்ள வேண்டும். இது கால்பந்தாட்டத்தைப் போன்றது கிடையாது. சமீபத்தில் உலகின் பல பயிற்சியாளர்கள் இந்தப் போக்கைக் கடைபிடித்து வருகின்றனர். கிரிக்கெட் கேப்டனுக்கான விளையாட்டு என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். 
 

 

 

மேலும், நடந்து கொண்டிருக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணித் தேர்வு பணிகளில், ரோகித் சர்மாவின் போக்கில் ரவி சாஸ்திரி தலையிடுகிறாரா என்றும், அந்நிய நாடுகளில் இந்திய வீரர்களை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பது பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டார். 
 

சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த சமயம், அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சாப்பலின் தலையீடு அதிகமாக இருந்தது. அதுவே அவரது விளையாட்டில் தொய்வை ஏற்படுத்தியதாகவும் சர்ச்சைகள் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.