Skip to main content

உடலில் விபூதி பூசிக்கொள்ள வேண்டும் ஏன் ?

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

நாம் வாழ்வில் நன்மைகள் நடைபெறவேண்டுமென்று இறைவனை வேண்டுகிறோம். தீமைகள் நடந்தால் அதிலிருந்து மீளவும் இறைவழிபாடு செய்கிறோம். இதற்கு ஜோதிடமும் துணைபுரிகிறது. ஒருவர் ஜாதகத்திலிருக்கும் கிரகங்களின் நிலைமையையும் தசாகாலங்களையும் பார்த்து, அதற்கேற்றபடி கடவுள்களை வழிபடவேண்டும். பொதுவாக யாரும் எப்போதும் கடவுளை வழிபடலாம். ஆனால், சில விசேஷ காரியங்களைச் செய்யும்போதும், சில விசேஷ பரிகாரங்களைச் செய்யும்போதும் சரியான நேரத்தில் பூஜை செய்தால் மட்டுமே கடவுளின் அருள் கிடைக்கும்.

 

god



உதாரணத்திற்கு... ஒருவர் ஜாதகத்தில் சூரியன் சரியில்லையென்றால் அவருக்கு பயம் உண்டாகும். பலருக்கு தூக்கம் வராது. சூரியன் இருக்கும் இடத்திற்கேற்ப கெட்டபலனை அனுபவிக்க வேண்டியதிருக்கும். சூரியன் ஜாதகத்தில் சரியான இடத்தில் இல்லாமலிருந்தால், அதிகாலையில் குளித்த பின்னர் சூரியனுக்கு நீர் வார்த்து, "ஓம் ஆதித்யாய நமஹ' அல்லது "ஓம் சூர்ய நாராயணாய நமஹ' என்ற மந்திரத்தைக் கூற வேண்டும். அதன்மூலம் சூரியனின் தோஷம் நீங்கும். விஷ்ணுவின் அருள் கிடைக்கும். சூரியன் 4-ல் தனித்திருந்து அதை பாவகிரகம் பார்த்தால், அந்த மனிதர் வாழ்க்கையில் பலருக்கு நன்மைகள் செய்திருப்பார். எனினும், அவர்களால் அவருக்கு எந்த நன்மைகளும் நடக்காது. குடும்பத்தில் இருப்பவர்களோ, நண்பர்களோ அவர்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.

இந்தக் குறையுள்ளவர்கள், காலையில் செப்புப் பாத்திரத்தில் குங்குமம், சர்க்கரை, சிவப்பு மலரின் இதழ்கள் ஆகியவற்றை நீரில் கலந்து, சூரியனைப் பார்த்தவாறு வார்க்க வேண்டும். அப்போது "ஓம் க்ரணி சூர்யாய நமஹ' என்ற மந்திரத்தைக் கூறவேண்டும். தினமும் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கவேண்டும். ஜாதகத்தில் சூரியன், ராகு சேர்க்கை லக்னத்தில் அல்லது 7-ல் இருந்தால், கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. சூரியன் விரய ஸ்தானத்தில் இருந்து அதைப் பாவகிரகம் பார்த்தால் பித்ரு தோஷம் உண்டாகும். பலருக்கு தலைமுடி உதிர்ந்துவிடும்.

 

god



இந்த பாதிப்பு உள்ளவர்கள் நீரில் குங்குமம், சர்க்கரை ஆகியவற்றுடன் சிறிது பன்னீரைக் கலந்து சூரியனுக்கு வார்க்க வேண்டும். சிவாலயத்திற்குச் சென்று பால், நீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். தினமும் மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தைக் கூறுவது சிறந்தது. குலதெய்வ வழிபாடு நலம் சேர்க்கும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சரியில்லாமலிருந்தால், அவருக்கு ஈர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். சகோதரர்களுடன் சரியான உறவிருக்காது. பலரின் உடலில் சுண்ணாம்புச் சத்து குறைவாக இருக்கும். விபத்தை சந்திக்க நேரும். வீடு வாங்கும் அதிர்ஷ்டம் இருக்காது.

இந்த பாதிப்பு உள்ளவர்கள் காலை வேளையில் சூரியனை வணங்க வேண்டும். ஆஞ்சனேயர் ஆலயத்திற்குச் சென்று, நான்குமுறை சுற்றி வரவேண்டும். அங்கு பூந்தி அல்லது லட்டு அல்லது வெல்லம், துளசி ஆகியவற்றை பிரசாதமாக வைத்து ஆஞ்சனேயருக்குப் பூஜை செய்ய வேண்டும். தினமும் காலையில் அரச மரத்திற்கு நீர்விட்டு ஒரு தீபத்தை ஏற்றி வைக்கவேண்டும். பலருக்கு இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. சிலருக்குத் திருமணத்தில் தடைகள் ஏற்படும். தாமதமாகத் திருமணம் நடக்கும். இதற்குக் காரணம் செவ்வாய், சனியுடன் சேர்ந்து 1, 4, 7, 8, 12-ல் இருப்பதுதான்.

இந்த தோஷம் உள்ளவர்கள் வீட்டிலிருக்கும் பூஜையறையில் தினமும் ஒரு தீபமேற்ற வேண்டும். சிவன் ஆலயத்திற்குச் சென்று அபிஷேகம் செய்து, சிவப்பு மலர் வைத்துப் பூஜை செய்யவேண்டும். அங்கு ஆலமரம் அல்லது வில்வமரம் இருந்தால் அதற்கு நீர்விட வேண்டும். சுக்கிரன், சூரியன், ராகு அல்லது சுக்கிரன், சூரியன், செவ்வாய் அல்லது சூரியன், சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் சேர்ந்து 1, 4, 7, 8, 12-ல் இருந்தால் பலருக்கு இல்வாழ்க்கை சந்தோஷமாக இருக்காது. தோல்விகளைச் சந்திப்பார்கள். அதனால் மனஅழுத்தத்துடனும் கவலையுடனும் காணப்படுவார்கள். இந்த தோஷத்திற்கு ஆளானவர்கள் தினமும் காலையில் சிவனுக்கு பால், தேன் அல்லது கரும்புச் சாறால் அபிஷேகம் செய்து தீபமேற்ற வேண்டும். உடலில் விபூதி பூசிக்கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு அன்னமிடுவது சிறந்த பரிகாரம்.