Skip to main content

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை நடத்திய உண்ணாநிலைப் போராட்டம் -அரசியல் கட்சியினர் பங்கேற்பு!

Published on 31/01/2022 | Edited on 31/01/2022

 

PARTIES

 

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை (SPCSS-TN) நடத்திய உண்ணாநிலைப் போராட்டம் மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றிய "தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான சட்டம், 2021", சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஆளுநர் உடனே அனுப்ப வேண்டும், மேலும் காலம் தாழ்த்தாமல்,  சட்ட முன் வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க, உரிய பரிந்துரையை, பிரதமர் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை,   வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் 30.1.2022 – அன்று போராட்டம் நடைபெற்றது. 

 

 

இந்த போராட்டத்தினை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு தலைமையேற்று நடத்தினார். முனைவர் பி.  இரத்தினசபாபதி, பேராசிரியர் சுகதியோ தோரட், பேராசிரியர் அனில் சட்கோபால் ஆகியோர் இணைய வழி உரையாற்றினர். மேலும் இந்த போராட்ட நிகழ்வில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல். ஏ., முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., செல்வ பெருந்தகை, எம்.எல்.ஏ., கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், மருத்துவர் எழிலன், எம்.எல்.ஏ மற்றும் பல அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்