உலகம் முழுவதும் தற்போது டிஜிட்டல் மயமாக இருப்பதால் யூ-ட்யூப் சேனல்களை தொடங்கி நடத்தும் உரிமையாளர்களின் வருமானம் வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதில் யூ-ட்யூப் சேனலை தொடங்கி அதிக வருமானம் பெரும் நபர்கள் யார் என பிரபல போர்ப்ஸ் நிறுவனம் லிஸ்ட் போடுகிறது.
இந்நிலையில் நடப்பாண்டில் உலக அளவில் அதிக ஊதியம் பெறும் யூ-டியூபர்ஸ் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் காஜி என்ற 8 வயது சிறுவன் முதலிடத்தை பிடித்திருக்கிறான். ஆண்டுக்கு 26 மில்லியன் (ரூ.184 கோடி) அவனது ஊதியமாக இருக்கிறது.
இந்த சிறுவனின் யூ-ட்யூப் சேனல் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, முதலில் பொம்மைகளை ரிவியூ செய்வது போல இருந்தது. இதன்பின் இந்த சேனலுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. முதன் முதலில் ரியான் பதிவிட்ட வீடியோ நான்கே நாட்களில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
ரியான் வேர்ல்ட் என்று பதிவிடப்பட்டுள்ள இந்த சேனலின் மொத்த வியூ 35 பில்லியன்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. தற்போது 8 வயதை எட்டியுள்ள சிறுவன் ரியான், பொம்மை விளையாட்டுகள் மட்டுமின்றி சிறிய அளவிலான அறிவியல் பரிசோதனைகளையும் செய்து வருகிறான். இதுதொடர்பான வீடியோக்களும் யூ டியூபில் வைரலாகி வருகிறது.
இவரை தொடர்ந்து மூன்றாம் இடத்தை ரஷ்யாவை சேர்ந்த ஐந்து வயது பெண் குழந்தையான அனஸ்தாசியா ராட்சின்கையா பிடித்திருக்கிறார். இவர் சுமார் 18 மில்லியன் (இந்திய மதிப்பில் 128 கோடி) டாலர் பெறுகிறார்.